![]() |
தம்ம மதுரா - விபஸ்ஸனா தியான மையம் சயாக்யி ஊ பா கின் அவர்கள் வழிமுறைப்படி திரு ச.நா.கோயங்கா அவர்களால் கற்றுக்கொடுக்கப்படும் தியான முறை பயில தமிழ் நாட்டில் இரண்டாவது மையம்ப்> |
![]() |
முகாம் நிரல் தம்ம மதுராவில் 2014 மற்றும் 2015-ம் ஆண்டு 10-நாள் மற்றும் ஸதிபட்டான ஸூத்த முகாம்கள் நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளன.
முகாம் நிரலைக் காணவும் மற்றும் இணையம் மூலம் நேரிடையாக விண்ணப்பிக்கவும்
இங்கே உறுதி செய்யப்பட்ட முன்பதிவு இருத்தல் அவசியம். |
தமிழ் நாட்டில் இரண்டாவது விபஸ்ஸனா தியான மையம் செட்டியாபட்டியில் (காந்திகிராமம் அஞ்சல்) அமைந்துள்ளது.
மேலும் நிழற்படங்கள்: வானிலிருந்து... |
மலைக்காட்சி
|
தம்ம கூடங்கள்
|
மகளிர் தங்குமிடம்
|
ஆடவர் தங்குமிடம்
|
மற்ற வசதிகள்
|
இந்த தம்ம பூமி மதுரை-திண்டுக்கல் நெடுஞ்சாலையிலிருந்து உள்ளே 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது திண்டுக்கல் நகரிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது. திண்டுக்கல் நகரம் கோவையிலிருந்து 160 கி.மீ. தொலைவிலும், திருச்சியிலிருந்து 100 கி.மீ. தொலைவிலும், மதுரையிலிருந்து 64 கி.மீ. தொலைவிலும், கரூரிலிருந்து 75 கி.மீ. தொலைவிலும், கொடைக்கானல் மலைகளிலிருந்து 84 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
(வழித்தடம் காட்டும் வரைபடங்கள்:
(1) மதுரையிலிருந்து ;
(2) திண்டுக்கல்லிலிருந்து
;
(3) செட்டியாப்பட்டியிலிருந்து
;
(4) ஆட்டோ வாகனக் கட்டணம்
)
இந்த நிலம் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகைகள் நிறைந்த சிறுமலை குன்றை அடுத்து அமைந்துள்ளது. இங்கு வீசும் காற்று சிறு நோய்களை குணப்படுத்த வல்லது. குறிப்பாக, ஆஸ்துமா நோயாளிகள் இங்கு வருவதால் பெரும் பயன் பெறுவர். இந்த நிலம் ஒரு புறத்தில் மலையும், ஒரு புறத்தில் சாலையும், மற்றுமொரு புறத்தில் மழைக்காலங்களில் மலையிலிருந்து பெருகும் ஒரு ஓடையும் சூழ விளங்குகிறது
முதன்மை தம்ம கூடம் பல பாரம்பரிய மற்றும் நவீன கட்டுமான முறைகளை உபயோகித்து ஆண்டு முழுவதும் தியானம் செய்ய ஏற்புடைய சூழல் நிலவும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
நன்கொடை அளிக்க வங்கி விவரங்கள்
வங்கி | பாரத ஸ்டேட் வங்கி (STATE BANK OF INDIA) |
கிளை | ஆனையூர் மதுரை |
கணக்கு எண் | 00000035965685170 |
கணக்குப் பெயர் | VIPASSANA MEDITATION CENTRE |
CIF No. | 5825127042 |
IFS Code | SBIN0012764 |
MICR code | 625002036 |
உங்கள் நன்கொடைகள் இந்தியாவில் வருமான வரி சட்டத்தின் 80-G பிரிவின் கீழ் வரி விலக்கு பெற தகுதியானவை.
மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்க...
மின்னஞ்சல் | [email protected] |
கைபேசி | 94421 03490, 94426 03490, 94437 28116, 98434 51153
(தயவுசெய்து பிற்பகல் 1 மணி முதல் 5 மணி வரை மட்டுமே அழைக்கவும்) |
முகாம் பதிவு |
இங்கே ![]() |